ஆணவத்தோடு விளையாடினால் தோல்வி மட்டும்தான் மிஞ்சும் ; இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர் !! 1
ஆணவத்தோடு விளையாடினால் தோல்வி மட்டும்தான் மிஞ்சும் ; இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்..

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மோசமான விளையாட்டுக்கான காரணமே அந்த அணியின் ஆணவம் தான் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ஆண்டி ராபர்ட் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த அணியாக போற்றப்படும் இந்திய அணி., உள்ளூர் தொடர்களில் புலியை போல் பாய்ந்தாலும் வெளிநாட்டு மற்றும் ஐசிசியால் நடத்தப்படும் முக்கியமான தொடர்களில் மிக மோசமாக விளையாடி அனைவருடைய விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

ஆணவத்தோடு விளையாடினால் தோல்வி மட்டும்தான் மிஞ்சும் ; இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர் !! 2

இந்திய அணியில் என்னதான் உலக தரம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கியிருந்தாலும், முக்கியமான போட்டிகளில் எப்பொழுது கோட்டை விடுவதையே இந்திய அணி வழக்கமாக வைத்துள்ளதால் இந்திய அணியை மற்ற நாடுகள் மீம்ஸ் மெட்டீரியலாக பயன்படுத்தி வருகிறது.குறிப்பாக நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடைந்த மோசமான தோல்வி இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

ஆணவத்தோடு விளையாடினால் தோல்வி மட்டும்தான் மிஞ்சும் ; இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர் !! 3

இதனால் பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ஆன்டி ராபர்ட்.,முக்கியமான போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு பிரதானமான காரணமே இந்திய அணியின் ஆணவம் தான் என வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

ஆணவத்தோடு விளையாடினால் தோல்வி மட்டும்தான் மிஞ்சும் ; இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து ஆண்டி ராபர்ட் பேசுகையில்.,“இந்திய அணியின் இந்த பரிதாபமான நிலைக்கு அவர்களுடைய ஆணவம் தான் முக்கிய காரணம். இந்திய அணி மற்ற அணிகளை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது,அதேபோல் இந்திய அணி எப்பொழுதும் டெஸ்ட் போட்டி லிமிடெட் ஓவர் போட்டிகளை விட t20 தொடருக்கே அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிற்கு எந்த ஒரு போட்டியுமே கிடையாது இதனால் தான் இந்திய அணி முக்கியமான தொடர்களில் பரிதாபமாக தோல்வி அடைகிறது” என ஆன்டி ராபர்ட் பேசியிருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *