டிசம்பர் மாதம் நடக்கவிருந்த ஆஸ்திரேலியா தொடர்.. இனி நடக்காது? காரணம் இதுதான்- பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!
டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் அட்டவணையில் மாற்றங்கள் வரலாம் என பிசிசிஐ அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில நாடுகளில் வைரஸ் தாக்கம் குறைவதால் வீரர்கள் மெல்லமெல்ல பயிற்சிக்கு திரும்பியுள்ளார்கள்.
ஆனால், இந்தியாவில் தற்போது நாள் ஒன்றிற்கு 5000-க்கும் அதிகமானோர் வைரஸ் தோற்றால் பாதிப்படைந்து வருவதால், ஜூலை மாதம் வரை வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்காது என அதிகாரமற்ற செய்திகள் வெளிவருகின்றன.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் அதனை நடத்துவது சாத்தியமற்றது என ஐசிசி-இடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
“டி20 உலகக்கோப்பை தொடர் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படவில்லை. அதேநேரம் ஒத்திவைக்கப்படவும் இல்லை.இன்னமும் பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக நிலவி வருகிறது. இந்த சாத்தியமற்றதாக படுகிறது. ஆஸ்திரேலியாவில் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்களை வரவழைப்பது என்பது பெரும் பாதிப்பிற்கு வழிவகுக்கலாம். அல்லது இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் மிகவும் கடினம். ஐசிசி இடம் இதுகுறித்து பேசியுள்ளோம். அங்கு கூட்டங்கள் நடத்தி முடிவெடுக்கவுள்ளது.” என ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
முதல் கட்டமாக இந்திய அணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. பின்னர் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
தற்போது டி20 உலக கோப்பை தொடர் நடப்பது சந்தேகம் என்பதால் முன்னதாக நடைபெறும் டி20 தொடரும் நடப்பது சாத்தியமற்றது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “டி20 உலக கோப்பை தொடர் ரத்து ஆனால், டி20 தொடருக்காக ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் இந்திய அணி நிறுத்தப்பட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்படும்” என தெரிவித்தார்.