தோனி இல்லாமல் இந்திய அணி ஒன்றுமே இல்லை; ஸ்டீவ் வாக் தடாலடி !! 1

தோனி இல்லாமல் இந்திய அணி ஒன்றுமே இல்லை; ஸ்டீவ் வாக் தடாலடி

தோனி என்ற ஒருவன் இல்லையென்றால் இந்திய அணியால் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்திய அணி பல்வேறு விமர்ச்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் இது தான் என முன்னாள் , இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், அதே போல் பலர் இந்திய அணி செய்த தவறுகளையும் சுட்டி காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக், தோனியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

தோனி இல்லாமல் இந்திய அணி ஒன்றுமே இல்லை; ஸ்டீவ் வாக் தடாலடி !! 2

தோனி குறித்து ஸ்டீவ் வாக் பேசியதாவது;

தோனி ஏராளமான போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ள நிலையில் அவரைப் பற்றி குறைகூறுவது நியாயமற்றது. இப்போது விளையாடும் இதே பாணியில்தான் தோனி நீண்டகாலமாக விளையாடி வருகிறார்.

நியூஸிலாந்து எதிரான போட்டி போன்ற சூழலில் நீங்கள் இருக்கும்போது, தோனி இல்லாமல் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. உங்களால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியாது. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-வது ரன் ஓடிவிட்டு வரும் போது தோனி கிரீஸ்க்கு சில இஞ்சுகள் மட்டுமே பின்தங்கி இருந்தார். ஒருவேளை தோனி ரன்அவுட் ஆகாமல் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருப்பார்.

தோனி இல்லாமல் இந்திய அணி ஒன்றுமே இல்லை; ஸ்டீவ் வாக் தடாலடி !! 3

ஒருநாள் போட்டியின்போது சேஸிங்கில் நாம் வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். இதுவரை விளையாடிய வீரர்களைக் காட்டிலும் தோனி சிறப்பாகவே விளையாடியுள்ளார்

240 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஹென்றி, போல்ட் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டார்கள். 240 ரன்களை எளிதாக சேஸிங் செய்துவிடுவோம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், தோற்றதால், இந்திய அணி வீரர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *