விராட் கோலி, ரோகித் சர்மா
விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே மீண்டும் மோதலா..?கோவமாகிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் மத்தியில் பிளவு எனக் கூறுபவர்கள் தங்களுடைய சுய விளம்பரத்திற்காக மட்டுமே கூறுகிறார்கள் என ரவி சாஸ்திரி கடுமையாக சாடியுள்ளார்.

சமகால இந்திய அணியின் அசைக்க முடியாத தூண்களாக திகழும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் மத்தியில் மோதல் உள்ளதாகவும், அணியில் இரண்டு குழுவாக உள்ளதாகவும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவி வரும்.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே மீண்டும் மோதலா..?கோவமாகிய இந்திய அணியின் முன்னாள் வீரர் !! 1

குறிப்பாக விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பொழுது இந்த செய்தி இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் காட்டு தீ போல் பரவி வந்தது.இரு வீரர்களுமே அந்த சமயத்தில் மௌனம் காத்ததால் இது உண்மையான செய்தி என நம்பி, முக்கியமான சில ஊடகங்களே இந்த செய்தியை பரப்பி வந்தனர்.

ஆனால் இருவருமே நட்புறவோடும் அணியின் வளர்ச்சிக்காகவும் ஒற்றுமையாக தான் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டதால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மோதல் என வெளியான வதந்தி சற்று அடங்கி போயிருந்தது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே மீண்டும் மோதலா..?கோவமாகிய இந்திய அணியின் முன்னாள் வீரர் !! 2

இந்த நிலையில்,பிரபல youtube சேனலில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கு மத்தியில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது, இது சம்பந்தமாக பிரபல கிரிக்கெட் பத்திரிகையாளர் விமல் குமார், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, “அவர்களுக்கு கேடு தான் உண்டாக போகிறது, இந்த ஒட்டு மொத்த செய்தியும் உங்களுக்கு வெறும் பொழுதுபோக்காக உள்ளது, ஆனால் எனக்கு இதைவிட முக்கியமான விஷயங்கள் உள்ளன. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் மத்தியில் சுமூகமாக தான் உள்ளது, மேலும் அவர்கள் இருவருக்கும் மத்தியிலும் நல்ல புரிதல் உள்ளது, 100% இருவரும் ஒற்றுமையாக உள்ளனர். ஆனால் வேலை இல்லாத சிலர், இது சம்பந்தமாக பேசிப் பேசி அற்பமாக நடந்து கொண்டிருக்கின்றன” என ரவி சாஸ்திரி கடுமையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *