இவர்கள் இருவருக்கு டி20 உலகக்கோப்பையில் இடம் உண்டு: விராட்கோலி வெளியிட்ட சீக்ரெட் 1

டி20 உலககோப்பைக்கு செல்லும்  அணியில் இவர்கள் இருவருக்கும் நிச்சம் இடம் உண்டு என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி.

ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவிருக்கிறது. இதற்கான சிறந்த அணியை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் மும்முரம் காட்டிவருகிறது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று துவங்குகிறது. இதில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சாஹர் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் உள்ளனர். இத்தொடரிலும் பும்ரா ஓய்வில் உள்ளார்.

இவர்கள் இருவருக்கு டி20 உலகக்கோப்பையில் இடம் உண்டு: விராட்கோலி வெளியிட்ட சீக்ரெட் 2

அடுத்த ஆண்டு உலககோப்பைக்கு இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார் இருவரும் நிச்சயம் இருப்பர். தற்போதில் இருந்து முகமது ஷமியை தயார் செய்ய நிர்வாகம் விரும்புகிறது. இந்நிலையில் இன்னும் ஒரு இடம் மட்டும்தான் உள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி பேட்டியளிக்கையில்,

“வேகப்பந்து வீச்சில் இன்னும் ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது. அந்த ஒரு இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இது அணிக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.

இவர்கள் இருவருக்கு டி20 உலகக்கோப்பையில் இடம் உண்டு: விராட்கோலி வெளியிட்ட சீக்ரெட் 3
India’s bowlers Mohammed Shami (L) and Jasprit Bumrah attend a training session at the Rose Bowl in Southampton, southern England, on June 20, 2019, ahead of their 2019 World Cup cricket match against Afghanistan. (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)

புவனேஷ்வர் குமார், பும்ரா அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான வகையில் பந்து வீசி வருகிறார்கள். இவர்களின் இதன் உறுதி என நினைக்கிறேன்.

தற்போது தீபக் சாஹர் அணிக்குள் வந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

முகமது ஷமி டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு பந்து வீச்சை மெருகேற்றி வருகிறார். ஆஸ்திரேலியா போன்ற சூழ்நிலையில் அபாரமாக பந்து வீசக்கூடியவர். குறிப்பாக புதுப்பந்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தும் திறமை படைத்தவர்.

பொறுத்திருந்து பாப்போம். மற்றொரு இடத்தை யார் நிரப்புவார்கள் என்று” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *