வெவ்வேறு அணுகுமுறையை வெளிப்படுத்தினோம். இறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எங்களுடைய இந்த வெற்றிக்கு காரணம் இவர் தான் என்கிறவாறு முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற பிறகு கம்மின்ஸ் பேசியுள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆசஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது எதிர்பாராத விதமாக டிக்ளேர் செய்தது.
அதன் பிறகு முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 386 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தட்டுதடுமாறி 273 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஏழு ரன்கள் முன்னிலை பெற்றது உட்பட மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி தட்டுதடுமாறி வந்தது. கவாஜா அணியை தூக்கி நிறுத்தி 65 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கடைசியில் வந்த பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றி கனவை தகர்த்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இறுதிவரை நின்று வெற்றி பெற்று கொடுத்த கம்மின்ஸ் போட்டி முடிந்த பிறகு பேசியதாவது:
இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு கடினமாக இல்லை ஏதோ மைதானத்திற்குள் பேய் இருப்பது போல பேசினார்கள் அப்படி எதுவும் இல்லை. இரு அணிகளும் வெவ்வேறு விதமான அணுகுமுறையை கடைபிடித்தார்கள் எங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை வெளிப்படுத்தினோம் சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன் அதனால்தான் வெற்றி பெற்று இருக்கிறோம். பேஸ்பால் அணுகுமுறை அவர்களுக்கு உதவுவதாக உணர்கிறார்கள். அதில் நான் கமெண்ட் செய்ய எதுவும் இல்லை. எங்களுக்கு சரி என்பதை நாங்கள் செய்தோம்.
கவாஜா இரண்டு இன்னிங்சிலும் மிகச்சிறப்பாக விளையாடினார். அவரது ஆட்டம் இங்கிலாந்தில் சரியாக இல்லை என்று போட்டிக்கு முன்னர் தொடர்ந்து பேசி வந்தார். சில விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் எங்களுக்குள் சென்றது. தற்போது கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை நினைத்து மகிழ்கிறேன்.
நேத்தன் லைன் ஒரு சூப்பர் ஸ்டார். அணிக்கு அப்படிப்பட்ட ஒரு வீரர் இருப்பது கேப்டன்களுக்கு பலம் சேர்க்கும். எந்த சூழலிலும் பந்து வீசக்கூடியவர். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலிலும் கையாண்டு கேப்டன்களுக்காக வேலையை முடித்து கொடுக்கக் கூடியவர். கடைசியில் வந்து பேட்டிங்கிலும் சில பவுண்டரிகள் அடித்தது எனக்கு மிகப்பெரிய அழுத்தத்தை குறைத்துவிட்டது.
இது போன்ற போட்டிகள் கடைசிவரை எந்த பக்கம் செல்லும் என்பதை கருத்தில் கொள்ளாமல் ஆட வேண்டும். இல்லையெனில் அந்த பயம் உங்களுக்கு ஒட்டிக் கொள்ளும். உரிய ஆட்டம் வெளிப்படாது.” என்றார்.