ஹலோ நியூசிலாந்து.. இவங்க ரெண்டு பேர் இல்லாதப்போ ஜெயிச்சிட்டீங்க; ரொம்ப ஆடவேண்டாம் – முன்னாள் வீரர் பேட்டி!

இந்திய அணியில் இது மிஸ் ஆகிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாஷிம் ஜாபர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

டி20 தொடரில் இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்து ஆனது. ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆகையால் டி20 தொடரை கைப்பற்றி விட்டது. ஒருநாள் தொடரிலும் இதே போன்று நடந்தது. ஆனால் அந்த ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

டி20 தொடரில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, ஒரு நாள் தொடரில் ஓய்வில் இருந்தார். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உலகக் கோப்பை தொடர் மற்றும் நியூசிலாந்து தொடர் என இரண்டிலும் காயம் காரணமாக விளையாடவில்லை. அடுத்து வரும் பங்களாதேஷ் அணியுடன் நடக்கும் தொடரிலும் அவர் விலகி இருக்கிறார்.

இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் மிகவும் திணறியதற்கு முக்கிய காரணம் பந்துவீச்சு தான். இந்திய அணியின் ஆறாவது மற்றும் ஏழாவது பந்துவீச்சு ஆப்ஷனாக இருக்கும் இல்லாதது பெருத்த பின்னடைவை தந்து இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாபர்.

“ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் இல்லை. இவர்கள் இருந்திருந்தால் இந்தியாவிற்கு பவுலிங் பிரச்சினை வந்திருக்காது. இருவரும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் செய்வார்கள். தற்போது அதுதான் மிகப்பெரிய குறையாக அமைந்ததுவிட்டது.

ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அதில் ஒரு பாதியை எடுத்துக் கொண்டார். இன்னொரு ஆல்ரவுண்டர் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் தீபக் ஹூடா சொதப்பினார்.

தீபக் ஹூடாவிற்கு உரிய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒரு போட்டியில் உள்ளே வைத்துவிட்டு, மற்றொரு போட்டியில் வெளியில் அமர்துவது அவரது தன்னம்பிக்கையை உடைக்கும். ஆகையால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மனதளவில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை வளரும்.

தொடர் முழுவதும் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் முதிர்ச்சியுடன் செயல்பட்டது சிறப்பாக இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இவர் பலரின் கவனத்திலும் இருப்பார் என நினைக்கிறேன்.” என்றும் கூறினார்.

Mohamed:

This website uses cookies.