தற்பொழுது ஷிகர் தவன் தலைமையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெற இருக்கிறது. போட்டி ஒருவரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் நிச்சயமாக ஏதேனும் ஒரு அணி வணிண்டு ஹசரங்காவை ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் என்ற தற்பொழுது கூறியிருக்கிறார்.

மிகச் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை அணியின் இளம் வீரர்கள்
தற்பொழுது இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் இளம் வீரர்களாக களமிறங்கிய மிக சிறப்பாக இலங்கை அணி சார்பாக ஹசரங்கா பெர்ணான்டோ மற்றும் சமித் கருணரத்னே ஆகியோர் விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முதல் டி-20 ஆட்டத்தில் வணிண்டு ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி வெறும் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதேபோல அவர் கைப்பற்றிய விக்கட்டுகள் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகள் ஆகும்.
நிச்சயமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் இவர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் 10 அணிகளை கொண்டு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் நிறைய வீரர்கள் களம் இறங்கி விளையாடுவார்கள். குறிப்பாக வெளியூர் வீரர்கள் நிறைய பேர் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் அணையில் வெளியூர் ஸ்பின் பந்து வீச்சாளர் தேவைப்படும் நேரத்தில், நிச்சயமாக தற்போது மிக சிறப்பாக விளையாடி வரும் வணிண்டு ஹசரங்காவை வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. டி20 போட்டிகளில் மிக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை கைப்பற்றும் அளவுக்கு நல்ல திறமை வாய்ந்த பந்துவீச்சாளராக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். எனவே அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் களமிறங்கிய விளையாடுவார் என்று முத்தையா முரளிதரன் தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.