பும்ரா பந்துவீச்சு எனக்கு இப்படித்தான் இருந்தது.. பாத்து ஆடுங்க; இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த ஆஸி., துவக்க வீரர்! 1

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராஹ் பந்தை எதிர்கொள்வது எனக்கு இப்படித்தான் இருந்தது என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி.

ஆஸ்திரேலியா  சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு அந்த டெஸ்ட் தொடர் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது. முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறியதனால் இரண்டாம்கட்ட வீரர்களை வைத்து டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

பும்ரா பந்துவீச்சு எனக்கு இப்படித்தான் இருந்தது.. பாத்து ஆடுங்க; இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த ஆஸி., துவக்க வீரர்! 2

இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமல்லாது ஆஸ்திரேலிய வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக துவக்க வீரர் வார்னர் காயம் காரணமாக வெளியேறினால் மற்றுமொரு துவக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி அணியில் இடம் பிடித்தார். அவர் இந்திய அணியை அறிமுகப் போட்டியில் எதிர்கொண்டது குறித்தும், குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டது குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அளவிற்கு தாக்கம் கொடுத்ததாக நான் எண்ணவில்லை. ஆனால் பும்ரா சவாலான பந்துவீச்சாளராக இருந்தார். குறிப்பாக அவரது பந்து எதிர்கொள்வது பிளேஸ்டேஷன் விளையாடுவது போல எனக்கு தோன்றியது. சற்றும் மாற்றிக் கொள்ளாமல் குறித்த நேரத்தில் குறித்த இடத்திலேயே பந்துவீசினார். ஒரு சில பந்துகள் விளையாடுவதற்கு எளிதாக இருந்தாலும் பல நேரங்களில் தடுமாற்றத்துடன் எதிர்கொண்டேன்.

பும்ரா பந்துவீச்சு எனக்கு இப்படித்தான் இருந்தது.. பாத்து ஆடுங்க; இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த ஆஸி., துவக்க வீரர்! 3

இருப்பினும் சமாளித்து ஒரு கட்டத்தில் அரைசதம் அடித்தேன் என்று நினைக்கையில் சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் நீண்ட நேரம் அவரது பந்தை எதிர் கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்று தான். பும்ரா துள்ளியமாக பந்து வீசுவது மட்டுமல்லாது மிகவும் வேகமாகவும் பந்துவீசினார். மிகுந்த ஆர்வத்துடன் அவரை எதிர்கொண்டு விளையாடினேன். அவரது பந்துவீச்சு எனக்கு நல்ல அனுபவத்தையும் பெற்றுத் தந்தது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *