இந்திய கிரிக்கெட் அணிக்காக மகேந்திர சிங் தோனி தன்னை எப்படி அர்பணிக்கிறார் என்று அனைவருக்குமே தெரியும். இந்திய கிரிக்கெட் அணியை பற்றி ஒரு புது புத்தகத்தில் வந்ததை பார்த்தால் தோனியின் மீது மேலும் மரியாதை கூடும்.
இதுவரை இரண்டு உலககோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது 2015 உலககோப்பைக்கு தயார் ஆகி கொண்டிருந்தார் தோனி. ஆனால் தன் நாட்டுக்காக கவனம் செலுத்திய தோனி, இந்தியாவில் தெரிந்தவர்களின் காண்டக்ட்டை கட் செய்தார்.
உங்களுக்கு குழந்தை பிறக்கும் சமயத்தில் இந்தியாவை மிஸ் பண்றீங்களான என்று கேட்ட போது, “கண்டிப்பாக இல்லை,” என தோனி தெரிவித்தார்.
“எனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. தாய் மற்றும் குழந்தை ஆகியோர் நலமாக உள்ளார்கள்,” என்று தோனி தெரிவித்தார். “ஆனால் நான் தற்போது நாட்டுக்காக விளையாடி கொண்டிருப்பதால், நான் கொஞ்சம் காத்திருக்கவேண்டும். முக்கியமானதே 2015 உலகக்கோப்பை தொடர் தான்.”
புதிய புத்தகத்தை வெளியிட்ட ராஜதீப் சர்தேசை – தோனியின் மகள் ஸிவா பிறந்ததை தோனிக்கு தெரியப்படுத்த சுரேஷ் ரெய்னாவுக்கு தகவல் அனுப்பினார் சாக்ஷி என கூறினார்.