சேப்பாக்ல முதல்முறையா பேட்டிங் இறங்கப்போறேன்.. 2019இல் சிஎஸ்கேவுக்கு வந்திலிருந்தே என்னோட கனவு இது - ருத்துராஜ் கெய்க்வாட் உருக்கமான பேச்சு! 1

நான்கு வருடங்களாக இந்த வாய்ப்பிற்காகத் தான் காத்திருந்தேன். கனவு நனவானதுபோல இருக்கிறது என்று சிஎஸ்கே அணிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக பேட்டிங் செய்யப் போவது பற்றி உருக்கமாக பேசியுள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட்.

2019ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக முதன்முதலில் எடுக்கப்பட்டார் இளம் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட். அந்த சீசனில் ஒரு போட்டியில் கூட இவரை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை.

சேப்பாக்ல முதல்முறையா பேட்டிங் இறங்கப்போறேன்.. 2019இல் சிஎஸ்கேவுக்கு வந்திலிருந்தே என்னோட கனவு இது - ருத்துராஜ் கெய்க்வாட் உருக்கமான பேச்சு! 2

2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், சிஎஸ்கே அணி இனி பிளே-ஆப் போகாது என்று உறுதியானவுடன் கடைசி கட்டத்தில் சில போட்டிகள் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை அபாரமாக பயன்படுத்திய ருத்துராஜ், 6 போட்டிகளில் 3 அரைசதம் உட்பட 208 ரன்கள் குவித்தார்.

 

இதனால், 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணிக்கு ஓபனிங் செய்து வருகிறார். 2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை தட்டி சென்றது. அதில் ருத்துராஜ் கெய்க்வாட், 16 போட்டிகளில் 1 செஞ்சுரி, 4 அரைசதம் உட்பட 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.

சேப்பாக்ல முதல்முறையா பேட்டிங் இறங்கப்போறேன்.. 2019இல் சிஎஸ்கேவுக்கு வந்திலிருந்தே என்னோட கனவு இது - ருத்துராஜ் கெய்க்வாட் உருக்கமான பேச்சு! 3

2022 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு ஒட்டுமொத்தமாக சரியாக அமையவில்லை என்றாலும், ருத்துராஜ் மிகச்சிறப்பாக செயல்பட்டார். 14 போட்டிகளில் 3 அரைசதம் உட்பட 368 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணியின் நம்பிக்கையளிக்கும் துவக்க வீரராக இருந்து வரும் ருத்துராஜ், இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

கொரோனா தோற்று காரணமாக கடந்த 3 சீசன்கள், இந்தியாவில் குறிப்பிட்ட சில மைதானங்களில் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்தாண்டு மீண்டும் பழையபடி, சொந்த மற்றும் வெளி மைதானங்களில் நடக்கிறது.

சமீபத்தில் துவங்கிய இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது சிஎஸ்கே. அப்போட்டியில் தோல்வியை தழுவியது. தனது இரண்டாவது போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.

சேப்பாக்ல முதல்முறையா பேட்டிங் இறங்கப்போறேன்.. 2019இல் சிஎஸ்கேவுக்கு வந்திலிருந்தே என்னோட கனவு இது - ருத்துராஜ் கெய்க்வாட் உருக்கமான பேச்சு! 4

4 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ஆடுகிறது. இதில் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் அறிமுகமாகிறார் ருத்துராஜ்.இதுபற்றி ருத்துராஜ் உணர்வுப்பூர்வமாக பேசியதாவது:

“இந்தாண்டு மீண்டும் ஹோம் மற்றும் அவே முறைப்படி போட்டிகள் நடக்கும் என்று தெரிந்தவுடன், மிகவும் உற்சாகமாகவும் ஆவலாகவும் இருந்தேன். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடவேண்டும் என்பது, சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற முதல் சீசனில் இருந்தே எனது கனவு. அது இன்று நனவாகிறது என்று நினைக்கையில், உணர்ச்சிவசமாக உணர்கிறேன். இனம்புரியாத மகிழ்ச்சி. சென்னை ரசிகர்களின் அன்பை வந்த முதல் சீசனில் இருந்தே பெற்று வருகிறேன். பேட்டிங் மூலம் நன்றிகடனை தீர்ப்பேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *