இந்திய அணியில் இது ஒரு சாபக்கேடு - வேகபந்துவீச்சாளர் ஓபன் டாக் 1

இந்திய அணியில் இது ஒரு சாபக்கேடு – வேகபந்துவீச்சாளர் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களுக்கு இப்படி ஒரு நிலை இருக்கிறது என மனம் திறந்துள்ளார் இஷாந்த் சர்மா.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இதுவரை 96 டெஸ்டில், 292 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ரஞ்சி கோப்பை போட்டியில் களமிறங்கி ஆடி வருகிறார்.

இந்திய அணியில் இது ஒரு சாபக்கேடு - வேகபந்துவீச்சாளர் ஓபன் டாக் 2

இந்நிலையில், இந்திய அணியில் எதிர்கொண்டு வரும் சில இன்னல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்னை என்னவென்றால், எல்லோரும் மற்றவர்கள் குறைகளை மட்டும் தான் சொல்வர். யாரும் அதற்கு தீர்வு சொல்லமாட்டர். பிரச்னைகளுக்கு தீர்வு என்பது மிக முக்கியம்.

ஒரு சிறந்த பயிற்சியாளர் என்பவர், குறைகளுக்கு தீர்வையும் சொல்ல வேண்டும். ஒருசிலர் சிறப்பாக செயல்படுகின்றனர் என உணர்ந்துள்ளேன். என் விஷயத்தில் பந்தில் வேகத்தை கூட்ட வேண்டும் என பலரும் ‘அட்வைஸ்’ செய்தனர்.

இந்திய அணியில் இது ஒரு சாபக்கேடு - வேகபந்துவீச்சாளர் ஓபன் டாக் 3
BIRMINGHAM, ENGLAND – AUGUST 03: Ishant Sharma of India celebrates dismissing Ben Stokes of England during day three of Specsavers 1st Test match between England and India at Edgbaston on August 3, 2018 in Birmingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

இதை எப்படிச் செய்வது என யாரும் சொல்லவில்லை. இங்கிலாந்தில் கவுன்டி போட்டியில் பங்கேற்ற போது, ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கில்லஸ்பி, எனக்கு சரியான முறையில் தீர்வு சொன்னார். எனது பயிற்சி முறைகளில் லேசான மாற்றம் ஏற்படுத்தினார்.

பந்தை எங்கு ‘பிட்ச்’ செய்வது என கணிப்பதை விட, பந்து எங்கு, எப்படிச் செல்கிறது என கவனிக்க ஆலோசனை தந்தார். தற்போது முன்பை விட அதிக வேகத்துடன் பவுலிங் செய்ய இவர் தான் காரணம் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *