இந்த ஆஸ்திரேலிய அணி ரொம்ப வொர்ஸ்டு.. விவிஎஸ் கருத்து! 1

என் வாழ்க்கையில் பலவீனமான ஆஸ்திரேலிய அணியை இப்போதுதான் பார்க்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் கணித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களில் எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள், அவர்கள் யார் என்பதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படும்.இந்த ஆஸ்திரேலிய அணி ரொம்ப வொர்ஸ்டு.. விவிஎஸ் கருத்து! 2

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதைத் தக்கவைக்க அடுத்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது அவசியமாகும். இந்த ஆண்டில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கத் தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலியத் தொடரையாவது வெளிநாட்டில் வென்றால்தான் தர வரிசையில் முதலிடத்தை இந்தியா பிடிக்க இயலும். அதுமட்டுமல்லாமல், இனி டெஸ்ட் தொடர் என்பது இந்தியாவுக்கு ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்புதான் வருகிறது.

102 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 5-வது இடத்தில் இருக்கிறது. டேவிட் வார்னர், ஸ்மித் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக பேட்டிங்கில் பார்க்கப்படுவது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு இதுவரை 11 முறை பயணம் சென்றுள்ள இந்திய அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. ஆனால், முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்துக் கூறுகையில், இந்திய அணி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைக்க இப்போது நேரம் வந்திருக்கிறது என்று கணித்துள்ளார்.

இந்த ஆஸ்திரேலிய அணி ரொம்ப வொர்ஸ்டு.. விவிஎஸ் கருத்து! 3

தனியார் செய்திசேனல் ஒன்றுக்கு வி.வி.எஸ்.லட்சுமண் அளித்த பேட்டியில் கூறியதாவது:

”என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியத் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தீவிரமாக நம்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கான எந்தச் சூழலும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் இந்திய அணிக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்திய அணியைக் குறைத்து மதிப்பிடவில்லை.

நான் ஆஸ்திரேலியாவில் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து விளையாடி இருக்கிறேன், நான் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதே கடந்த 1996-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். அப்போது இருந்த ஆஸ்திரேலிய அணியில் தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள். யார் ஆட்டமிழந்தாலும், மற்றொருவர் நிலைத்து நின்று அணியை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் வெற்றி பெற வைக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். அந்த மாதிரியான குணங்களை எந்த அணியும் எளிதாகக் கைவிட்டுவிடாது, நம்பிக்கையில் பிடிப்பாக இருப்பார்கள்.இந்த ஆஸ்திரேலிய அணி ரொம்ப வொர்ஸ்டு.. விவிஎஸ் கருத்து! 4

ஆனால், இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் அந்த நம்பிக்கையையும், திறமையையும் நான் பார்க்கவில்லை. ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் அவரின் ஒட்டுமொத்த திறமையையும் காட்டுகிறார். எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த பயிற்சியாளர் இல்லை என்கிற போதிலும், அதிகபட்சமான திறமையை வெளிப்படுத்துகிறார். ஆனால், நான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் பார்த்தவரையில் மிகவும் பலவீனமான ஆஸ்திரேலிய அணி எது என்றால் இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணிதான். அதனால் எனக்கு இந்திய அணி மீது நம்பிக்கை இருக்கிறது.

விராட் கோலிக்கு மட்டும் இது முக்கியமான பயணம் அல்ல, இந்திய அணிக்கும் கூடத்தான். வெளிநாட்டிலும் தொடரை வெல்ல முடியும் என்று நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு. அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், திறமையான பந்துவீச்சாளர்கள் ஒருங்கே கிடைத்துள்ளார்கள். மாயாஜாலம் நிகழ்த்தும் சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

ஆதலால், வாய்ப்புக்களை இந்திய அணி தவறவிட்டுவிடக்கூடாது.இங்கிலாந்தில், தென் ஆப்பிரிக்காவில் செய்ய முடியாததை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி நிகழ்த்த முடியும். மிகப்பெரிய வரலாறு படைக்கலாம்”.

இவ்வாறு வி.வி.எஸ் லட்சுமண் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *