சுஷாந்த் சிங் அடுத்து மனம் விரக்தியில் சுற்றித்திரிந்த முன்னாள் இந்திய வீரர்; வருத்தத்துடன் பேசியதால் ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான் 1

இரண்டு ஆண்டுகள் அணியில் இல்லாததால் தூக்கமே இல்லை; வருத்தத்துடன் பேசிய யுவராஜ் சிங்!

அணியில் இடம்பெறாதது எனது நிம்மதியை குழைத்துவிட்டது என மனம் திறந்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்.

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியில் இவரின் பங்கு இன்றியமையாததாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 2007ம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பிராட் வீசிய ஓவரில் பந்துகளில் 6 சிக்சர்களை விளாசினார்.

சுஷாந்த் சிங் அடுத்து மனம் விரக்தியில் சுற்றித்திரிந்த முன்னாள் இந்திய வீரர்; வருத்தத்துடன் பேசியதால் ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான் 2

அடுத்ததாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் இவரது பங்கு மிக முக்கியமாக இருந்தது. அதில் தொடர்நாயகன் விருது இவருக்குக் கிடைத்தது. அந்த அளவிற்கு இந்திய அணியில் நேர்த்தியாக செயல்பட்டவர் யுவராஜ் சிங்.

2011ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது புற்று நோயில் மிகவும் அவதிப்பட்டு வந்திருக்கிறார் யுவராஜ் சிங். அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பிய யுவராஜ் 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் மிகவும் விரக்தியில் இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் கடினமான சூழ்நிலையை சந்தித்து வந்த யுவராஜ் ஒருவழியாக 2019ஆம் ஆண்டு அனைத்துவித போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

சுஷாந்த் சிங் அடுத்து மனம் விரக்தியில் சுற்றித்திரிந்த முன்னாள் இந்திய வீரர்; வருத்தத்துடன் பேசியதால் ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான் 3

இதுகுறித்து அவர் கூறுகையில், “பல்வேறு காரணங்களுக்காக 2–3 மாதங்கள் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது. கிரிக்கெட் விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆனால் மனநிலை அதற்க்கு உதவவில்லை.

எனக்கு மனதளவில் கிரிக்கெட் உதவவில்லை. அந்த தருணம் முதல் ஓய்வு பற்றி சிந்திக்க துவங்கினேன். ஓய்வு பெற்ற தருணம் எனக்கு மகிழ்ச்சி மற்றும் வருத்தம் இரண்டையும் கொடுத்தது. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருப்பினும் மனநிலை ரிலாக்ஸ் ஆக இருந்தது. பல ஆண்டுகள் துாக்கமில்லாமல் தவித்துள்ளேன். ஓய்வுக்கு பின் தான் மீண்டும் நிம்மதியாக தூக்கமே வந்தது. அச்சமயம் ரசிகர்களின் அன்பு எனக்கு எப்போதும் ஆறுதலாக இருந்தது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *