இந்த இந்திய வீரரை நினைவில் வைத்துதான் நாங்கள் டிக்ளேர் செய்ய தயங்கினோம்; ரூட் ஓபன் டாக்! 1

400 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகும், ஏன் முன்கூட்டியே ஆட்டத்தை டிக்ளேர் செய்யவில்லை? என உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் அடித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்ததால் 241 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் எடுத்திருக்கையில் கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலை பெற்றபோதும் ஆட்டத்தை டிக்ளேர் செய்யவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த இந்திய வீரரை நினைவில் வைத்துதான் நாங்கள் டிக்ளேர் செய்ய தயங்கினோம்; ரூட் ஓபன் டாக்! 2

ஏன் இரண்டாவது இன்னிங்க்ஸை முன்கூட்டியே டிக்ளேர் செய்யவில்லை என்பது குறித்து போட்டி முடிந்த பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட். அவர் கூறுகையில்,

இந்த இந்திய வீரரை நினைவில் வைத்துதான் நாங்கள் டிக்ளேர் செய்ய தயங்கினோம்; ரூட் ஓபன் டாக்! 3

“எங்களது திட்டம் ஆட்டம் வெற்றி அல்லது தோல்வி முடிவு வேண்டும் என்பதுதான். டிரா குறித்த சிந்தனை இல்லை. 5ஆம் நாள் ஆட்டம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும் என எண்ணினேன். ஆனாலும் பவுண்டரிகள் அடிப்பது இந்த மைதானத்தில் எளிது என்பதால் அது குறித்த சிந்தனையும் எங்களுக்குள் இருந்தது.

இந்த இந்திய வீரரை நினைவில் வைத்துதான் நாங்கள் டிக்ளேர் செய்ய தயங்கினோம்; ரூட் ஓபன் டாக்! 4

ஏனெனில், ரிஷப் பண்ட் ஒரு சேஷன் முழுவதும் பேட் செய்தால் எளிதில் இலக்கை எட்டும் அளவிற்கு ரன்களை எடுத்துக் கொடுத்துவிடுவார். எனவே  டிக்ளேர் குறித்து அப்போது சிந்திக்காமல் 400 ரன்களை கடந்த பிறகு அதிரடியாக விளையாடி முடிந்த அளவிற்கு ரன்களை எடுத்து விட்டு நிறைவு செய்ய வேண்டும் என எண்ணினேன். இதனால்தான் நாங்கள் முன்கூட்டியே டிக்ளேர் செய்ய தயங்கினோம். இருப்பினும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சன் மற்றும் லீச் இருவரும் பந்து வீசிய விதம் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்ததில் பெருமகிழ்ச்சி.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *