சும்மா தோல்வியை மட்டும் பேசாதீங்க.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் இந்திய அணி தரமான சாதனை செய்துள்ளது ; முன்னாள் வீரர் பாராட்டு !! 1
சும்மா தோல்வியை மட்டும் பேசாதீங்க.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் இந்திய அணி தரமான சாதனை செய்துள்ளது ; முன்னாள் வீரர் பாராட்டு..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் இந்திய அணி சிறந்த அணி தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு சென்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து இருந்தபோது, கடந்த முறையை போலவே இம்முறையும் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது.

சும்மா தோல்வியை மட்டும் பேசாதீங்க.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் இந்திய அணி தரமான சாதனை செய்துள்ளது ; முன்னாள் வீரர் பாராட்டு !! 2

இதன் காரணமாக இந்திய அணி தோல்வி தழுவியதற்கான காரணம் என்ன..? எந்த இடத்தில் இந்திய அணி தவறு செய்தது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தேர்ந்தெடுத்த ஆடும் லெவன் சரிதானா..? என்பது போன்ற சுவாரஸ்யமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்., டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தடவி இருந்தாலும் தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது மிகப்பெரிய சாதனைதான் என்று இந்திய அணியை பாராட்டி பேசியுள்ளார்.

சும்மா தோல்வியை மட்டும் பேசாதீங்க.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் இந்திய அணி தரமான சாதனை செய்துள்ளது ; முன்னாள் வீரர் பாராட்டு !! 3

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பேசுகையில்.,“இந்திய அணி குறித்து நல்ல விதமாக நாம் பேசுவோமேயேனால் இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது, இது சாதாரண சாதனை கிடையாது. அதேபோன்று 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி சுற்று வரை முன்னேறி அசத்தியுள்ளது ஆனால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் வெளியேறிவிட்டது. இந்த விஷயத்தில் இந்திய அணி சற்று மாற்றத்தை கொண்டு வர வேண்டும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் யுத்தியை கொஞ்சம் மாற்றி பார்க்க வேண்டும் என்று இந்திய அணியை பாராட்டியதோடு இந்திய அணிக்கு தேவையான அறிவுரைகளையும் வாசிம் கொடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *