இந்த வீரரின் இந்த வருடத்திற்கான சிறப்பான செயல்பாடு இதுதான்.. விவிஎஸ் லக்ஷ்மன் பேட்டி!! 1


இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் இந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் மிகச் சிறப்பாக பந்துவீசி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை  பெற்றுள்ளது.

இந்த வீரரின் இந்த வருடத்திற்கான சிறப்பான செயல்பாடு இதுதான்.. விவிஎஸ் லக்ஷ்மன் பேட்டி!! 2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் பந்துவீச்சு தான்.இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திணறடித்தனர்.குறிப்பாக இந்திய அணியில் அஸ்வின் பந்துவீச்சில் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். இவர் மிக நேர்த்தியாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திணறடித்தார்.

இந்த வீரரின் இந்த வருடத்திற்கான சிறப்பான செயல்பாடு இதுதான்.. விவிஎஸ் லக்ஷ்மன் பேட்டி!! 3


இவர் ஆஸ்திரேலிய அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை மிகவும் எளிதாக அவுட் ஆக்கினார். மொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவருடைய.. எகானமி ரேட் 2.08ஆகும்.

குறிப்பாக இந்திய அணிக்காக இவர் தான் அதிகமான ஓவர்களை வீசி ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார்.

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் தொடரின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகத் திகழும் ஸ்டீவ் ஸ்மித்தை இருமுறை அவுட் செய்து சாதனை படைத்தார்.

இந்த வீரரின் இந்த வருடத்திற்கான சிறப்பான செயல்பாடு இதுதான்.. விவிஎஸ் லக்ஷ்மன் பேட்டி!! 4


இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் இதுபற்றி கூறுகையில் ரவிச்சந்திரன் மிகத் திறமையான பந்து வீசுகிறார். இவர் ஒவ்வொரு பந்தையும் மிகவும் நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் வீசுகிறார் அஸ்வீனின் பந்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .அஸ்வினுக்கு எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்று மிக தெளிவாக தெரிந்திருக்கிரது என்று அஸ்வின் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *