விராட் கோஹ்லிக்கு முன்னாள் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையே இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லிக்கு முன்னாள் இருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வி.வி.எஸ் லக்‌ஷ்மன் ஓபனாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் கேப்டன்சி மீது அதிகமான விமர்ச்சனங்கள் எழுந்தது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கோஹ்லியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற அளவிற்க பேசி வந்தனர்.

விராட் கோஹ்லிக்கு முன்னாள் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையே இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

மறுபுறம் முன்னாள் வீரர்கள் பலர், கோஹ்லிக்கு ஆதரவாக பேசியும், கோஹ்லிக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், விராட் கோஹ்லி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மன் கோஹ்லிக்கு முன்னாள் இருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து லக்‌ஷ்மன் பேசுகையில், “ஒவ்வொரு தொடரிலும் கோலி ஆடும் விதம், அந்த தீவிரத்தன்மையையும் வேட்கையையும் அவர் களத்தில் காட்டும் விதம் ஆகியவை அபரிமிதமானது. ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு சவாலாக அமையும். பேட்டிங்கோ ஃபீல்டிங்கோ எந்தவொரு சூழலிலும் அவரது எனர்ஜி குறைந்ததே இல்லை என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லிக்கு முன்னாள் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையே இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் மூலம் 12000 ரன்கள் கடந்த விராட் கோஹ்லி, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 12000 ரன்களை எட்டிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின்(300) சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *