இலங்கை அணி முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷன் மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆட தயாராக உள்ளதாக தெரிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தா.ர் தனது 40 வயதில் ஓய்வை அறிவித்த பின்னர் தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.
அவர் காலத்தில் ஒரு ஆல்ரவுண்டர் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தவர் குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு முக்கியமான வீரராக இருந்து வந்தார். திலகரத்னே தில்ஷன், முத்தையா முரளிதரன், சனத் ஜெயசூர்யா, குமார் சங்கக்காரா ,ஜெயவர்தனே மற்றும் சமிந்தா வாஸ் ஆகிய அனைவரும் தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி படு பாதாளத்திற்கு சென்றுள்ளது.
கடந்த இரண்டு வருடமாக 40 போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை 30 போட்டிகளில் தோல்வி மட்டுமே அடைந்துள்ளது. இந்த நிலையைக் கண்டு மிகவும் வருத்தப்பட்ட திலகரத்னே தில்ஷன் தற்போது மீண்டும் தனது அணியை காப்பாற்ற இலங்கை அணிக்கும் வருவதாக செய்திகள் வந்துள்ளது.
இது குறித்து ஒரு முக்கிய செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் 42 வயதான திலகரத்னே தில்ஷன் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ஆடுவது குறித்து சின்ன ஹின்ட் கொடுத்துள்ளார். அவரது அணியும் கடந்த 2 வருடமாக மோசமான நிலையில் உள்ளது இதனால் மீண்டும் அணிக்குள் வந்து 2019 உலகக்கோப்பை வரை அவர் விரும்புவதாகவும் தெரிகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்குத்தான் ஆதரவு அதிகம். இங்கு, வெறிகொண்ட ரசிகர்களை கொண்ட விளையாட்டாகவும் இருக்கிறது கிரிக்கெட்! இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் என்றால் கேட்கவே வேண்டாம். இந்தியாவில் கிரிக்கெட் மதமாகிவிட்டது என்று கூட சொல்கிறார்கள். இந்தியாவை அடுத்து பாகிஸ்தான், இலங்கையிலும் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் அதிகம்தான்.
ஆசியாவில் பலம் கொண்ட அணிகளாக இருந்த இந்த அணிகளில், இலங்கை அணிக்கு இப்போது நேரம் சரியில்லை போல! கடந்த இரண்டு வருடங்களாக அந்த அணி தொடர்ந்து சறுக்கிக்கொண்டே வருகிறது. அணியின் பயிற்சியாளரை மாற்றியும் மாற்றம் வரவில்லை அங்கு.
2017-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வென்றதற்கு செய்வினை வைத்ததுதான் காரணம் என்று கூறியிருந்தார் இலங்கை பெண் ஒருவர். ’கேப்டன் சண்டிமால் கேட்டுக்கொண்டதால் பில்லி சூனியம் வைத்தேன். அதனால்தான் இலங்கை அணி வெற்றி பெற்றது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 
’இப்போது அது உல்டா ஆகியிருக்குமோ என்னமோ, இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக யாராவது சூனியம் வைத்திருப்பார்களோ?’ என்று கிண்டலடிக்கிறார்கள் ரசிகர்கள் சிலர்.
ஐந்து முறை ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணியை, ஜஸ்ட் லைக் தேட்-ஆக தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது ஆப்கானிஸ்தான். முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரஹ்மத் ஷா அதிகப்பட்சமாக 72 ரன்களும் இஹ்ஷானுல்லா 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் திசாரா பெரேரா 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி, 41.2 ஒவர்களில் 158 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, ஆசியாவில் தன்னை கொஞ்சம் பலம் கொண்ட அணியாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது.