"புதிய கீப்பரை தேட இதுதான் சரியான தருணம்" - தோனியை பழிதீர்க்கும் கம்பீர்!! 1

இந்திய அணிக்கு புதிய கீப்பரை நியமிக்க இதுதான் சரியான தருணம் என கூறியுள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர்.

உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, தோனி எப்போது ஓய்வு பெறுவார்? இந்திய அணியில் தொடர்ந்து தோனி நீடிப்பாரா? என்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. அதிலும் பிசிசிஐ, இனிவரும் தொடர்களில் தோனி 11 வீரர்களில் இருக்கமாட்டார். ஆனால், அணியின் ஆலோசனைக்காக 15 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெறுவார் என அதிரடியாக அறிவித்தது.

தோனியின் பெற்றோரும், இதுதான் தோனி ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்று கூறியுள்ளனர். இருப்பினும், அவரது முடிவை அவரே எடுப்பது தான் சரி என்றும் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு தோனி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

"புதிய கீப்பரை தேட இதுதான் சரியான தருணம்" - தோனியை பழிதீர்க்கும் கம்பீர்!! 2

தோனிக்கு பிறகு, அவரது இடத்திற்கு ரிஷப் பண்ட்டை கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், பண்ட்டிற்கு போதுமான அனுபவம் இல்லாததால், ஆலோசனைக்காக சில காலம் தோனி அணியில் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தோனி அணியில இடம்பெறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பர் தேடுவதற்கான சரியான நேரம் இதுதான்.

"புதிய கீப்பரை தேட இதுதான் சரியான தருணம்" - தோனியை பழிதீர்க்கும் கம்பீர்!! 3

எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. தோனி கேப்டனாக இருக்கையில், ஆஸ்திரேலியாவில் ஆடும் பொழுது ஒரு முறை நான், சச்சின் மற்றும் சேவாக் மூவரும் ஒரே போட்டியில் ஆடுவது கடினம். ஆஸ்திரேலியா மைதானம் பெரிது என்பதால் சரியாக பீல்டிங் செய்ய முடியாது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்குள் இவர்கள் தயாராவது தோனி எடுக்கும் முடிவிலேயே இருக்கிறது என கம்பீர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *