டி.என்.பி.எல் கோப்பையை தட்டி தூக்கியது மதுரை பாந்தர்ஸ் !! 1
டி.என்.பி.எல் கோப்பையை தட்டி தூக்கியது மதுரை பாந்தர்ஸ்

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் அருண் கார்த்திக் அதிரடியால் திண்டுகல் டிராகன்ஸ் அணியை விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மதுரை பாந்த்ர்ஸ் அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், பால்சந்தர் அனிருத் 4 ரன்னிலும், சதுர்வேத் 9 ரன்னிலும், தோதாத்ரி 0 ரன்னிலும், மோகன் அபிநவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

டி.என்.பி.எல் கோப்பையை தட்டி தூக்கியது மதுரை பாந்தர்ஸ் !! 2

இதனால் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ஜெகதீசன் 42 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் அடித்தார்.

மதுரை பாந்தர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 3.5 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

டி.என்.பி.எல் கோப்பையை தட்டி தூக்கியது மதுரை பாந்தர்ஸ் !! 3

இதைத்தொடர்ந்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் அருண் கார்த்திக் மற்றும் தலைவன் சற்குணம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தலைவன் சற்குணம், ரஹேஜா மற்றும் ரோகித் ஆகியோர்  ரன் ஏதும் அடிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

டி.என்.பி.எல் கோப்பையை தட்டி தூக்கியது மதுரை பாந்தர்ஸ் !! 4

இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அருண் மற்றும் ஷிஜித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 17.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழந்து 119 ரன்களை குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கள் அணியை   வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

அந்த அணியில் அருண் கார்த்திக் 71 ரன்களுடனும், சந்திரன் 38 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *