டிஎன்பிஎல் தொடரில் எத்தனை கோடி சூதாட்டம்... அம்பலமான திடுக்கிடும் உண்மை.. அடுத்த சீசனில் இந்த இரு அணிகள் நீக்கம்! 1

டி.என்.பி.எல்., தொடரின் கடந்த சீசனில் எத்தனை கோடி மதிப்பிற்கு ஊழல் ஏற்பட்டுள்ளது என பிசிசிஐ ஊழல் தடுப்பு குழு திடுக்கிடும் உண்மையை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழக பிரிமியர் லீக் டி–20 தொடர் 2016ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படுகிறது. இதில், 2018ஆம் ஆண்டு நடந்த சீசனில் மிகப்பெரிய அளவிலான சூதாட்டம் நடைபெற்றிருப்பதாக பி.சி.சி.ஐ.க்கு தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

டிஎன்பிஎல் தொடரில் எத்தனை கோடி சூதாட்டம்... அம்பலமான திடுக்கிடும் உண்மை.. அடுத்த சீசனில் இந்த இரு அணிகள் நீக்கம்! 2

பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் உட்பட அனைவரையும் தனது விசாரணைக்கு உட்படுத்தி, ஆதாரங்களை சேகரித்து வந்தது. முதல் கட்டமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதாலும் மேலும் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த பி.சி.சி.ஐ., பொதுக்குழுவில், டி.என்.பி.எல்., தொடரில் இரு அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, தலைவர் கங்குலி ஆதாரங்களுடன் கூறினார். இதனிடையே, துாத்துக்குடி அணியின் சக உரிமையாளர்கள் இருவரை விலகுமாறு, சமீபத்தில் டி.என்.சி.ஏ., கேட்டுக்கொண்டது.

டிஎன்பிஎல் தொடரில் எத்தனை கோடி சூதாட்டம்... அம்பலமான திடுக்கிடும் உண்மை.. அடுத்த சீசனில் இந்த இரு அணிகள் நீக்கம்! 3

தற்போது பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு குழு அறிக்கையில்,டி.என்.பி.எல்., தொடரில் மதுரை, துாத்துக்குடி அணிகள் மோதிய போட்டியில் ரூ. 225 கோடி வரை அளவிலான தொகைக்கு பெட்டிங் நடந்தது. மேலும், இதற்க்கு அதிகமான தொகையே இருக்கும் எனவும் குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தது. இதை சர்வதேச பெட்டிங் இணையதளம் தெரிவித்துள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஊழல் குறித்த முழு ஆதாரங்கள் கிடைத்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. ஊழல் நிரூபிக்கப்பட்டால் அடுத்த சீசனில் 2 அணிகளும் ஆடுவது சந்தேகம் தான். ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் இதுபோன்ற பெட்டிங் சூதாட்டத்தில் சிக்கி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *