"போதும்டா சாமி" இதான் என்னோட கடைசி டெஸ்ட் சீரிஸ்.. என் மனைவியிடம் ஓப்பனாக சொல்லிவிட்டேன்! - அனைவருக்கும் ஷாக் கொடுத்த அஸ்வின்! 1

“கடைசி டெஸ்ட் தொடர் இதுதான் என்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னரே மனைவியிடம் கூறியிருந்தேன்.” என்று சமீபத்திய பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வளர்ந்திருக்கிறார். இந்திய வீரர்கள் மத்தியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளேவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 474 விக்கெட்டுகளை (92 போட்டிகளில்) வீழ்த்தி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

"போதும்டா சாமி" இதான் என்னோட கடைசி டெஸ்ட் சீரிஸ்.. என் மனைவியிடம் ஓப்பனாக சொல்லிவிட்டேன்! - அனைவருக்கும் ஷாக் கொடுத்த அஸ்வின்! 2

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை. இது பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. இதற்காக கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக விமர்சிக்கப்படும் வந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் கடும் தோல்வியை சந்தித்தது. அஸ்வின் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாதது, டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது என பலவற்றிற்கும் ரோகித் சர்மா விமர்சிக்கப்பட்டு வந்தார்.

"போதும்டா சாமி" இதான் என்னோட கடைசி டெஸ்ட் சீரிஸ்.. என் மனைவியிடம் ஓப்பனாக சொல்லிவிட்டேன்! - அனைவருக்கும் ஷாக் கொடுத்த அஸ்வின்! 3

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்திய வீரர்களை அறிவித்த ஒரு வாரத்திற்கு பின்பு, அப்போது தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை நான் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். இதைப்பற்றி என் மனைவியிடமும் பேசிவிட்டேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார். பேட்டியில் அவர் பேசியதாவது:

“வங்கதேசம் டெஸ்ட் தொடர் முடிவுற்று வந்தபிறகு எனது காலில் சிலர் அசவுகரியம் இருப்பதை உணர்ந்தேன். ஆகையால் அடுத்து வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு பின் என்னால் விளையாட முடியும் என்று நம்பவில்லை. இதனை என் மனைவியிடம் கூறிவிட்டேன்.

பந்து வீசும்பொழுது எனது காலில் சிறு பிரச்சினை தெரிந்தது. இதை வைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் இனி விளையாட முடியாது. இதற்காக எனது பந்துவீச்சு ஆக்சனை மாற்றாக வேண்டும் என்று எண்ணினேன். வயது முதிர்வு காரணமாக எத்தனை காலம் இதை செய்ய முடியும் குறிப்பாக அதில் எவ்வளவு துல்லியம் கொண்டுவர முடியும் என்றும் எண்ணினேன்.

"போதும்டா சாமி" இதான் என்னோட கடைசி டெஸ்ட் சீரிஸ்.. என் மனைவியிடம் ஓப்பனாக சொல்லிவிட்டேன்! - அனைவருக்கும் ஷாக் கொடுத்த அஸ்வின்! 4

அதேநேரம் என்னுடைய கிரிக்கெட் கிரியேரில் நான் பலமுறை என்னுடைய ஆக்சனை மாற்றியிருக்கிறேன். இது எனக்கு ஒன்றும் புதிதல்ல. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அதிக வயதை எட்டிவிட்டால் தங்களது பழைய டெக்னிக்கில் பிடித்தமாக நின்று கொள்வார்கள். அப்டேட் ஆகமாட்டார்கள். அங்கே தான் அவர்கள் தவறு செய்கிறார்கள். வயதானால் என்ன? அனுபவத்தை வைத்துக்கொண்டு மாற்றி அமைக்கலாம். அதை கடைபிடித்தேன்.

இப்போது என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடிகிறது. நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்றும் நம்புகிறேன்.” என அஸ்வின் பேட்டியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *