2வது டெஸ்டுக்கான அணி அறிவிப்பு; முதல் போட்டியில் நன்றாக ஆடிய வீரர் நீக்கம்! 4 மாற்றங்கள் செய்து கேப்டன் அதிரடி முடிவு 1

2வது டெஸ்டுக்கான அணி அறிவிப்பு; முதல் போட்டியில் நன்றாக ஆடிய வீரர் நீக்கம்! கேப்டன் அதிரடி முடிவு

2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வீரர்கள் புதிதாக இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட பட்டியலை இங்கிலாந்து அணி வெளியிட்டிருக்கிறது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது

2வது டெஸ்டுக்கான அணி அறிவிப்பு; முதல் போட்டியில் நன்றாக ஆடிய வீரர் நீக்கம்! 4 மாற்றங்கள் செய்து கேப்டன் அதிரடி முடிவு 2

வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் காயம் காரணமாக விலகி இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியிருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாது முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய டாம் பெஸ் நீக்கப்பட்டிருக்கிறார். இது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக அணியில் பிராட், மொயின் அலி, பென் போக்ஸ் (கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஆலி ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2வது டெஸ்டுக்கான அணி அறிவிப்பு; முதல் போட்டியில் நன்றாக ஆடிய வீரர் நீக்கம்! 4 மாற்றங்கள் செய்து கேப்டன் அதிரடி முடிவு 3

முதல் போட்டியில் திறம்பட செயல்பட்ட டாம் பெஸ் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறித்து ஜோ ரூட் தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் டாம் பெஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதேநேரம் பந்துவீச திணறினார். அதிகமுறை டாஸ் பந்துகள் வீசியதனால் அவரது செயல்பாடு சற்று அதிருப்தியாக இருந்திருக்கிறது. முதல் இன்னிங்சிலும் சில பந்துகளை டாஸ் பந்துகளாக வீசியதும் இவரை நீக்கியதற்கு காரணமாக அமைந்து இருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

2வது டெஸ்டுக்கான அணி அறிவிப்பு; முதல் போட்டியில் நன்றாக ஆடிய வீரர் நீக்கம்! 4 மாற்றங்கள் செய்து கேப்டன் அதிரடி முடிவு 4

நட்சத்திர வீரர் ஆர்ச்சர் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முழுநேர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் குணமடைந்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் அணிக்கு திரும்பி விடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இரண்டாவது போட்டியில் ஆண்டர்சன் மற்றும் பிராட் இருவரும் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. ஜோ ரூட் இந்த ஜோடி மீது மிகுந்த நம்பிக்கையுடனும் இருக்கிறார் என்கிற வட்டார செய்திகள் வெளிவருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *