டெல்லி அணிக்கு ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இந்த வீரரை கழட்டிவிட்டுருங்க ;டெல்லி அணிக்கு அறிவுரை வழங்கும் முன்னாள் வீரர் !! 1
டெல்லி அணிக்கு ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இந்த வீரரை கழட்டிவிட்டுருங்க ;டெல்லி அணிக்கு அறிவுரை வழங்கும் முன்னாள் வீரர்..

பிரித்வி ஷாவை நம்புனா டெல்லி அணியின் எதிர்காலம் முடிவுக்கு வந்துடும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

 

நடப்பு ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்துவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால் டெல்லி அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் மோசமாக செயல்பட்டு இதுவரை தான் எதிர்கொண்டு 6 போட்டிகளில் ஐந்து தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

டெல்லி அணிக்கு ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இந்த வீரரை கழட்டிவிட்டுருங்க ;டெல்லி அணிக்கு அறிவுரை வழங்கும் முன்னாள் வீரர் !! 2

இப்படி டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி பரிதாபமாக இருப்பதால் இனி வரும் போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற வேண்டும் என்ற கட்டத்தில் டெல்லி அணி தள்ளப் பட்டுள்ளது. இதனால் டெல்லி அணிக்கு முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் டெல்லி அணிக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

டெல்லி அணிக்கு ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இந்த வீரரை கழட்டிவிட்டுருங்க ;டெல்லி அணிக்கு அறிவுரை வழங்கும் முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஹைதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான டாம் மூடி., எதிர்வரும் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மிச்சர் மார்ஷை துவக்க வீரராக கலந்து இறக்கி வெற்றி பெறுவதற்கான வழியை டெல்லி அணி தேடிக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

டெல்லி அணிக்கு ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இந்த வீரரை கழட்டிவிட்டுருங்க ;டெல்லி அணிக்கு அறிவுரை வழங்கும் முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து டாம் மூடி பேசுகையில்.,“வீரர்கள் விஷயத்தில் நீங்கள் இக்கட்டான நிலையில் கடினமான முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும் தற்பொழுது டெல்லி அணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, பிரித்விஷா கடந்த ஆண்டுகளில் எப்படி சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும் ஆனால் நடப்பு ஆண்டு அவருக்கு சரியாக அமையவில்லை நிச்சயம் இதிலிருந்து அவர் மீண்டு வருவார் என நம்புவோம். ஆனால் அதற்காக இன்னும் ஒரு சில போட்டிகளில் அவரை துவக்க வீரராக களம் இறக்கி பார்ப்போம் என டெல்லி என முடிவெடுத்தால் அது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும், ஏனென்றால் டெல்லி அணிக்கு இருப்பதே இன்னும் ஒரு சில வாய்ப்புகள் தான் அதிலும் டெல்லி அணி தோல்வியை சந்தித்தால் டெல்லி அணிக்கு இந்த வருடம் பிளே-ஆப் செல்வது மிகவும் கடினமாகிவிடும். இதனால் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மிச்சல் மார்ஷை துவக்க வீரராக களமிறக்கி டெல்லி அணி விளையாட வைக்கலாம், இவரை விளையாட வைத்தால் டெல்லி அணிக்கு வலது இடது காம்பினேஷன் கிடைக்கும் இதனால் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடிக்க முடியும். மேலும் டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஷ் கூட்டணி நிச்சயம் டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்றும் டாம் மூடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *