இந்தியா , பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளும் ஏ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் பி பிரிவிலும் அணிகளும் இடம்பெற்றுள்ளன. நாளை துவங்க உள்ள இந்த போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. முற்றிலுமாக துபாயில் இந்த முறை விளையாட்டு தொடர்க நடைபெற உள்ளது.
ஏனெனில் இந்தியாவில் நடைபெற இருந்த இந்த தொடருக்கு பாகிஸ்தான் அணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நாங்கள் உங்களுடன் ஆட மாட்டோம் எனவும் கூறியது. இதற்கு காரணம் இந்திய அணி தொடர்ந்து அந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாட மறுப்பதாகும். இதனால் இந்த பிரச்சனையில் பாகிஸ்தான் அணி பழிக்குப் பழி வாங்கியது போல் நாங்களும் உங்களுடன் இந்தியாவில் ஆட மாட்டோம் என்று கூற பின்னர் இந்த தொடர் துபாயில் நடைபெறுவதாக அறிவித்தது ஆசியக் கிரிக்கெட் கவுன்சில்.
இந்திய அணி வரும் 17ஆம் தேதி முதல் போட்டியில் ஆடுகிறது. தனது முதல் போட்டியில் வலிமையில்லாத ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு 18ஆம் தேதி அதாவது அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் மோதவேண்டும். இந்த அடுத்தடுத்த நாள் போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் பலர் ஆட்சேபனையும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை சென்ற முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். மேலும் அந்த அணியிலும் திறமை வாய்ந்த பல வீரர்களும் பேட்டிங்கில் நன்றாக ஜொலிக்கும் அளவிற்கு சில வீரர்களும் உள்ளனர். இதனால் அந்த அணிக்கு பெரும் வாய்ப்பு உள்ளது.
வங்கதேச அணி நன்கு வளர்ந்து இருந்தாலும் அந்த அணியால் இருக்கும் திறமைகளை ஒரு முக்கியமான போட்டியின்போது பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த அணியை எப்போதும் உள்ளே வெளியே என வைப்போம் ஏனெனில் எப்போது என்ன செய்யும் என்று தெரியாது.
இலங்கை அணியை பொறுத்தவரை காயம்பட்ட சிங்கம் போல்தான் உள்ளது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அணியை விட்டு வெளியேறியவுடன் கடந்த சில வருடங்களாக அணியி கட்டமைப்பு செய்து வருவதால் பல அணிகளுக்கு எதிராக பல போட்டிகளில் தோற்று வருகிறது. அதனால் அந்த அளிக்கும் வாய்ப்பு குறைவுதான். ஆப்கானிஸ்தான் அணி பல திறமை வாய்ந்த இளம் வீரர்களைக் கொண்டுள்ளது. திடீரென அனைத்து அணிகளை தோற்கடித்து விட்டு இந்த அணி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
10.சச்சின் டெண்டுல்கர் – 17 விக்கெட்டுகள்
1990 முதல் 2018 வரை 23 போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் இதன்மூலம் இந்த பட்டியலில் பத்தாவது இடம் பிடித்துள்ளார் இந்தியாவின் 