உமேஷ் யாதவ் – 152.5 கி.மீ
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இவர் துல்லியமாக பந்து வீசவில்லை என்றாலும் இவருடைய வேகம் எப்போதும் குறைந்ததில்லை. பந்துவீச்சில் பல திறமை இருந்தும் சர்வதேச அணிகள் இவரைப் போட்டு புரட்டி எடுப்பது வழக்கமான ஒன்றுதான். இந்திய பந்துவீச்சாளர்கள் 150 கிலோ மீட்டருக்கு மேல் வீசும் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டு இவரது இளம்வயதில் 152.5 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இலங்கை அணியின் திலகரட்ன தில்ஷான் ஸ்டம்புகளை சிதற செய்தார். இதுவே இவர் வீசிய அதிவேக பந்து பந்தாகும்