6; விரேந்திர சேவாக் – மைக்கெல் கிளார்க்
கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் போது இந்திய வீரர் விரேந்திர சேவாக்கும், ஆஸ்திரேலிய அணியின் மைக்கெல் கிளார்க்கும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
அப்போதையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருந்த மைக்கெல் கிளார்க் சச்சினை அவமதிக்கும் விதமாக சச்சினுக்கு வயது அதிகமாகிவிட்டது, என்று கூறியதால் கடும் ஆத்திரம் அடைந்த சேவாக் நேராக சென்று மைக்கல் கிளார்க்கிடன் உனது வயது என்ன என்று கேட்டார், அதற்கு மைக்கல் கிளார்க் தனக்கு 23 வயது என்று கூறினார்.
உடனடியாக சேவாக் நி எல்லாம் சச்சினை பற்றி பேசலாமா..? அவர் யார்..? அவர் இதுவரை அடித்துள்ள சதங்கள் எத்தனை என்பது எல்லாம் உனக்கு தெரியுமா..? என்று வார்த்தைகளால் வறுத்து எடுத்தார். சச்சினே ஒரு கட்டத்தில் சிரித்து விட்டார்.