கிரிக்கெட் ஒரு அணியாக விளையாடும் விளையாட்டாக இருந்தாலும், பல நேரங்களில் அணியில் ஒருவரோ அல்லது இருவரோ அடிக்கும் சதங்களே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வது நிதர்சனமான ஒன்றாகும்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்துள்ள முதல் 10 அணிகளைப் பார்ப்போம்.
10.வங்கதேசம் – 42 சதங்கள்
வங்கதேச அணி இன்னும் பெரிதாக ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களை உருவாக்காத அணி. சற்று தற்போது தான் கிரிக்கெட் வளர்ச்சி அந்நாட்டில் துளிர் விட துவங்கியுள்ளது. இந்த சதப்பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது வங்கதேச அணி.
- வீரர்கள் எண்ணிக்கை – 125
- போட்டிகள் – 340
- சதம் – 42