1877ல் இருந்து கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகின்றன. முதலில் வந்தது நாட்கணக்கில் விளையாடும் டெஸ்ட் போட்டிகள் தான். ஆரம்பத்தில் 5 நாட்களுக்கும் மேல் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் பின்னர் சரியான விதிகள் வகுக்கப்பட்டு 5 நாட்கள் ஆனது. பின்னர் படிப்படியாக விதிகள் மேம்படுத்தப்பட்டு, தற்போது வரை பயனித்துள்ளது டெஸ்ட் போட்டிகள்.
1877ல் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மெல்போர்னில் நடைபெற்ற கிரிக்கெட் வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 46 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அப்போதிலிருந்து தற்போது வரை (ஆக்.11 2017) 2280 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன.
தற்போது வரை 12 அணிகளுக்கு (ஆப்கன், அயர்லாந்து உட்பட) டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பல அணிகள் விளையாடினாலும் டெஸ்ட் போட்டிகளின் உட்ச தர்த்துடன் விளையாடி ஆதிக்கம் செலுத்துவது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற சில நாடுகள் தான். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த தொடராக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆசஷ் தொடர் கருதப்படுகிறது.
தற்போது டெஸ்ட் போட்டிகளை அதிகம் வென்றுள்ள முதல் 10 அணிகளைப் பார்ப்போம்.
10.வங்கதேசம் –
வங்கதேச அணி 1971ல் இருந்து தொழில் முறையாக கிரிக்கெட் ஆடி வந்தாலும் 2000த்தில் தான் அந்த அணிக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேச அணி வெறும் 10 டெஸ்ட் போட்டிகளில் தான் வென்றுள்ளது. அதிகபட்சமாக 82 தோல்விகளை சந்தித்து 16 போட்டிகளை ட்ரா செய்துள்ளது.