5.இந்தியா
அனைத்து விதமான போட்டிகளிலும் அதிகப்படியாக விளையாடியுள்ளது இந்திய அணி. 1932 முதல் இந்திய அணி தன்னை டெஸ்ட் போட்டிகளில் அங்கீகரித்து விளையாடி வருகிறது. அக்காலம் முதலே திறமை வாய்ந்த உலகத்தரம் மிக்க வீரர்களை உலகின் கிரிக்கெட்டிற்கு கொடுத்து வந்தாலும். இந்திய அணியால் கிரிக்கெட் உலகில் தனிபெஊர்ம் சக்தியாக ஆதிக்கம் செலுத்த இயலவில்லை. கபில் தேவ் காலத்தில் துவங்கிய அணியின் ஒழுங்குபடுத்துதல் அசாருதின், கங்குலி என ஒரளவிற்கு வளர்ச்சியடைந்து, தோனி காலத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கி தற்போது கோலி அதனை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்திய அணி மொத்தம் 527 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 146 போட்டிகளில் வெற்றி பெற்று, 164 போட்டிகளில் தோல்வி அடைந்து, 216 போட்டிகளில் ட்ரா செய்தும், 1 போட்டி டையாகவும் முடிந்துள்ளது.