4.தென்னாப்பிரிக்கா
ஒருநாள் போட்டிகளில் 1991ல் தான் ஆடத் துவங்கியது தென்னாப்பிரிக்கா. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்குப் பிறகு டெஸ்ட் ஆடிய மூன்றாவது அணி தென்னாப்பிரிக்க அணி தான். 1889ல் இருந்து டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து காலனியாக ஆடியது. பின்னர் சுதந்திரம் பெற்று தனி நாடாக ஆடியது தென்னாப்பிரிக்கா.

தற்போது வரை, 427 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா, 161 போட்டிகளில் வென்றுள்ளது. அதே போல்,142 போட்டிகளில் தோல்வியும்,124 போட்டிகளில் ட்ராவும் செய்துள்ளது.