இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஏப்ரல் மாதம் துவங்கிய இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எஞ்சியுள்ள போட்டிகளில் செப்டம்பர் மாதம் துபாயில் வைத்து நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே ஐபிஎல் தொடர் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான பல விவாதங்கள் மற்றும் பல செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து அதிக தொகைக்கு ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
பேட் கம்மின்ஸ்
உலகின் தலைசிறந்த நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மிக சிறப்பாக செயல்படக்கூடிய வீரராவார். இவர் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.மும்பை இந்தியன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளுக்கு விளையாடியுள்ள பேட் கம்மின்ஸ் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஏலத்தில் 15.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவர் ஐபிஎல் தொடரில் அதிகமான சம்பளம் வாங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியலில் 37.5 கோடி பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
