ஸ்டீவ் ஸ்மித்
உலகின் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ், டாஸ்கர் கேரளா, ரைசிங் புனே சூப்பர் ஜெயின், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இறுதியாக டெல்லி கேப்பிடல் அணியில் விளையாடி உள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் பலமுறை இவருடைய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை இதன் காரணமாக 2021 ஐபிஎல் தொடரில் 2.2 கோடி ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் 47.82 கோடி சம்பளம் பெற்று அதிக சம்பளம் வாங்கிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பட்டியலில் நாலாம் இடத்தில் உள்ளார்.
