கிளன் மேக்ஸ்வெல்
ஒரு காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு பின் மிகவும் மந்தமான முறையால் விளையாடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் விளையாடியுள்ளார்.
தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வரும் இவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஒற்றை ஆளாக நின்று தனது அணியை வெற்றி பெற்றுக் கொடுக்கக்கூடிய திறமையுள்ள கிளன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இதுவரை 63.4 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
