ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 5 வள்ளல் பந்துவீச்சாளர்கள் ; முதலிடத்தில் யார் தெரியுமா..? 1
WELLINGTON, NEW ZEALAND - JANUARY 31: Shivam Dube of India bowls during game four of the Twenty20 series between New Zealand and India at Sky Stadium on January 31, 2020 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)
ஒரு ஓவருக்கு அதிகமான ரன்களை வாரி வழங்கிய மோசமான பந்துவீச்சாளர்கள்.
கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் அறிவுறுத்தியது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எவ்வாறு பந்துவீச்சாளர்களின் கைகளில் உள்ளதோ அதுபோல 20 ஓவர் போட்டியின் வெற்றியை தீர்மானிப்பது பேட்ஸ்மேன் கைகளில் உள்ளது.
ஸ்டூவர்ட் பிராட்..(36 ரன்கள்)
ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 5 வள்ளல் பந்துவீச்சாளர்கள் ; முதலிடத்தில் யார் தெரியுமா..? 2
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணிக்காக அதிகமான விக்கெட்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பல சாதனைகளை புரிந்தாலும் 2007இல் நடைபெற்ற உலககோப்பை தொடரில் நடந்த நிகழ்வு யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் ஸ்டூவர்ட் பிராட் ஆல் மறக்க முடியாத ஒரு மோசமான நிகழ்வாகும்.
2007 இல் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது, அதில் 19-வது ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராட் தனது வாழ்நாளில் இப்படி ஒரு வினோதமான சாதனை புரிவார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்திய அணிக்காக பேட்டிங் செய்த நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அனைத்து பந்தையும் மைதானத்தை விட்டு வெளியேற்றினார் அந்த ஓவரில் ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் அடித்து ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். இது ஸ்டூவர்ட் பிராட் இன் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத மோசமான நிகழ்வாகும்.
சிவம் துபே..(34ரன்கலள்)
ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 5 வள்ளல் பந்துவீச்சாளர்கள் ; முதலிடத்தில் யார் தெரியுமா..? 3
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் டி20 போட்டியில் பங்கேற்றார். அப்போது அவர் வீசிய பத்தாவது ஓவரை  நியூசிலாந்து அணியின் ராஸ் டைலர் மற்றும் டிம் செய்ஃபர்ட் வெளுத்து வாங்கினார்கள்.
அந்த ஓவரில் 4 சிக்ஸ் 2 ஃபோர் மற்றும் ஒரு நோ-பால் உட்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்தனர். அந்தப் போட்டியின் கேப்டனான ரோகித் சர்மா அந்தத் போட்டியில் அவருக்கு அடுத்து பந்து வீசுவதற்கான வாய்ப்பே கொடுக்கவில்லை.
இருந்தபோதும் மத்தப் பௌலர்களின் முயற்சியால் இந்தியா அணி அந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வைன் பார்னெல் (சவுத் ஆப்ரிக்கா), இசாதுல்லா டெளலட்சை (ஆப்கானிஸ்தான்), ஸ்டூவர்ட் பின்னி (இந்தியா), மேக்ஸ் ஓ டவுட் (நெதர்லாந்து)-32 ரன்கள்.
ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 5 வள்ளல் பந்துவீச்சாளர்கள் ; முதலிடத்தில் யார் தெரியுமா..? 4
ஒரு ஓவரில் 32 ரன்களை வாரி வழங்கிய பவுலர்கள் மொத்தம் 4 நபர்கள் உள்ளனர்.
சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த பார்னல், எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் வீசிய ஓவரில் ஜாஸ் பட்லர் அடித்து துவைத்தார் அந்த ஓவரில் மட்டும் 32 ரன்கள் எடுத்தார்.
2012இல் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் இசாதுல்லா வீசிய ஓவரில் ஜோஸ் பட்லர் 4 சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து மொத்தம் 32 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவை சேர்ந்த ஸ்டூவர்ட் பின்னி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் தனது மோசமான பந்து வீச்சால் ஒரு ஓவருக்கு 32 ரன்கள் கொடுத்தார் அந்த ஓவரில் ஏவின் லீவிஸ் 5 சிக்ஸ்கள் அடித்து அசத்தினார்.இவரின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2019 இல் டப்ளினில் நடைபெற்ற ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்துக்கு இடையிலான போட்டியில் மேக்ஸ் தனது மோசமான பந்து வீச்சால் ஒரு ஓவருக்கு 32 ரன்கள் கொடுத்தார். அந்த ஓவரில் ஜார்ஜ் முன்சே 4 சிக்ஸ் மற்றும் ஒரு போர் அடித்து அபாரமாக செயல்பட்டார்.
முகமது சைபுதீன் (பங்களாதேஷ்)-31 ரன்கள்..
 2017 இல் நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது அப்போட்டியில் முதலில் சிறப்பாக செயல்பட்ட சைபுதீன் தனது அணிக்காக 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் பின் அவர் வீசிய ஓவரில் டேவிட் மில்லர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த ஓவரில் 5 சிக்ஸ் மற்றும் ஒரு சிங்கிள் எடுத்து அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் அடித்தார் அந்த அந்த போட்டியில் மில்லரின் உதவியால் சவுத் ஆப்பிரிக்கா அணி 274 ரன்கள் எடுத்து 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டைரில் டூஃபே (நியூசிலாந்து), பிலவால் பட்டி (பாகிஸ்தான்), ராப் டைலர் (ஸ்காட்லாண்ட்), ஹமீத் ஷா (டென்மார்க்), ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்)-.30 ரன்கள்…
ஒரே ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய 5 வள்ளல் பந்துவீச்சாளர்கள் ; முதலிடத்தில் யார் தெரியுமா..? 5
டி-20 தொடரில் ஒரு ஓவரில் 30 ரன்கள் வழங்கிய பவுலர்கள் பட்டியலில் 5 பேர் உள்ளனர்.
2015 இல் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டி20 தொடரில் ரிக்கி பாண்டிங், டுபே வீசிய ஓவரில் மொத்தம் 30 ரன்கள் அடித்தார் அதில் நான்கு சிக்ஸ்களும் ஒரு போதும் அடங்கும்.
2014 நடந்த டி20 தொடர் ஆஸ்திரேலியா மட்டும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் பிலவால் பட்டி வீசிய ஓவரை ஆரோன் பின்ச் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரும் சேர்ந்து 30 ரன்கள் அடித்தனர் அதில் 3 பவுர் மற்றும் 2 சிக்ஸ்களும் அடங்கும்.
அடுத்ததாக ஹாங்காங் மற்றும் ஸ்காட்லாந்து இடையிலான டி20 தொடரில் ராப் டிரைலர் வீசிய ஓவரில் தண்வீர் அப்சல் மொத்தமாக 30 ரன்கள் எடுத்தார் அதில் நான்கு சிக்ஸ்களும் ஒரு போரும் அடங்கும்.
டென்மார்க் மற்றும் ஜெர்மனி இடையிலான ஈரோப்பியன் t20 வேர்ல்டு கப் தொடரில் ஹமித்ஷா வீசிய ஓவரில் ஜெர்மனியை சேர்ந்த கிரேக் மெஷேத் 30 ரன்கள் அடித்தார்.
இறுதியாக 2019 பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே இடையிலான டி20 தொடரில் ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரில் ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேனான ரயான் பர்ல் 30 ரன்கள் அடித்தார் அதில் மூன்று சிக்ஸ்களும் மூன்று போர்களும் அடங்கும். அந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *