இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர ஜடேஜா குஜராத்தை சேர்ந்த ஜம்மு நகரில் 1988 இல் பிறந்தார்.
2009இல் ஜடேஜா லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று பின் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் 2012இல் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். இவரின் மிகச் சிறந்த பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இவரை அணியில் நிரந்தரமாக இருக்க செய்தது.
ரவிச்சந்திர ஜடேஜா பேட்டிங்கிலும், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.

இந்திய vs நியூசிலாந்து (ஐசிசி உலக கோப்பை அரை இறுதி 2019 மான்செஸ்டர்)
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி உலக கோப்பை இந்திய அணிக்காக களம் இறங்கிய ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு ரஸ் டைலரை ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கினார்.
பின் களமிறங்கிய இந்திய அணி 92ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட்டை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது, அதன் பின் களமிறங்கிய ஜடேஜா மற்றும் தோனியின் அபாரமான ஜோடி 59 பந்துகளில் 77 ரன்களை அடித்து சிறப்பாக செயல்பட்டது. இருந்தபோதும் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது இதில் ஜடேஜா அரைசதம் கடந்து தனது பணியை மிகவும் சிறப்பாக செய்தார்.

இந்தியாvs நியூசிலாந்து( 2014 )ஆக்லாந்து
2014இல் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர் ஆக்லாந்தில் நடைபெற்றது இதில் இந்தியா முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று களமிறங்கிய இந்திய அணி 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 182 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பின் களமிறங்கிய ஜடேஜா மற்றும் தோனியின் ஜோடி மிகச் சிறப்பாக செயல்பட்டது கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமையில் ஜடேஜா இரண்டு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து மொத்தம் 17 ரன்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
அப்போட்டியில் ஜடேஜா 45 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார் மேலும் பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

இந்தியா-இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி( 2013 இறுதிப் போட்டியில் எட்ஜ்பஸ்டன்)
2013 நடைபெற்ற 20 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி வெற்றி பெற்றது இதற்கு முக்கிய காரணம் ஜடேஜா.
இந்திய அணி 13 ஓவர் முடிவில் 66 க்கு 5 விக்கெட்களை இழந்தது.
பின் 7வதாக களமிறங்கிய ஜடேஜா மற்றும் விராட் கோலி, அணியின் ஸ்கோரை 129 ஆக உயர்த்தினார். இதில் ஜடேஜா 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார பின் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரின் விக்கெட்டையும் ஜடேஜா எடுத்தார.

4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை பெற்று சென்றார்.
அந்த தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்களை வீழ்த்தி அதிகமான விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் அவருடைய ஆபரேஷன் 12.83.
இந்தியா vs இங்கிலாந்து 2017 சென்னை.
2017 இல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 -0 என்ற புள்ளியில் அடிப்படையில் வெற்றி பெற்றது இதற்கு முக்கிய காரணம் ரவிச்சந்திர ஜடேஜா இவர் பேட்டிங்கிலும் பௌலிங் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

அந்த தொடரில் இவர் 48 ரன்கள் கொடுத்த நிலையில் 7 விக்கெட்டுகள் எடுத்தார்.இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம் கருண் நாயர் மற்றும் ரவிச்சந்திர ஜடேஜா ஆகிய
இருவரும்தான் என்றும் கூறும் அளவுக்கு இவருடைய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா 2012 மெல்போர்ன்
உலகின் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா ஸ்டெம்பை குறிவைத்து எறிவதிலும் மிகவும் கெட்டிக்காரர் .
2012 மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டி20போட்டி மிகவும் கோலாகலமாக நடந்தது ஜடேஜாவின் அபரிமிதமான ரன் அவுட்டால்ஆரோன் ஃபின்ஜ் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஆகிய இருவரும் தனது விக்கெட்டை இழந்தனர். பின் களமிறங்கிய டேவிட் ஹஸி அடித்த பந்தை ஹீரோ போன்று எட்டிப்பிடித்து அவருடைய விக்கெட்டை கைப்பற்றினார்.

அதற்க்கு அடுத்த நாளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அந்த ஆண்டு 2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் போனார்.