உலக கோப்பை தொடரில் இருந்து அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணி அள்ளிச் சென்ற பணத் தொகை எவ்வளவு தெரியுமா? அதனை பின்வருமாறு காண்போம்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் இறுதிப் போட்டி வருகின்ற 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று வெற்றி பெறும் அணிக்கு தங்கத்தினால் ஆன உலகக் கோப்பையும் அத்துடன் சுமார் 4 மில்லியன் டாலர்களும் வழங்கப்படும். தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதேபோல் அரையிறுதியில் இருந்து வெளியேறிய இரு அணிகளுக்கும் தலா 8 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இந்திய ரூபாய் மதிப்பின் கோடி கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் 28.04 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 14.02 கோடியும் பரிசு தொகையாக கிடைக்கும். அரையிறுதியில் வெளியேறிய இரு அணிகளுக்கும் தலா 5.60 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல், லீக் சுற்றில் நடைபெற்ற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 40 ஆயிரம் டாலர் வெற்றிக்கான பரிசுத் தொகையாக கிடைக்கும். அதே போல் லீக் சுற்றில் முதல் நான்கு இடம் பிடித்து அரையிருதிக்கு முன்னேறும் 4 அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது இது இதுவரை எந்த உலகக் கோப்பை தொடர்களில் கொடுக்கப்படாத பரிசு தொகையாகும்.
இந்திய அணி அரையிறுதியில் வெளியேறியதால் 8 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பில் 5.6 கோடி ஆகும்.