இனி பந்துவீச்சாளர்கள் வீசும் நோ பால்களை இவர்கள்தான் கவனிப்பார்கள்! வெளியாகும் புதிய விதி!
பந்து வீச்சாளர்கள் நோ பால் வீசியதால் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார்கள் பல தொடர்களை இழந்திருக்கிறார்கள். இதில் உலக கோப்பை தொடரிலும் அடங்கும். ஆனால் பந்து வீச்சாளர்கள் நோபால் வீசாத போதும் கூட நடுவர்கள் களத்தில் கொடுக்கும் தவறான முடிவின் காரணமாக கூட பல கோப்பைகள் தவறாக சென்று சேர்ந்துள்ளது.
இதில் உலக கோப்பை தொடரிலும் அடங்கும் இலங்கை அணியின் நடுவரான குமார தர்மசேனா இவ்வாறு பல பந்துவீச்சாளர்களுக்கு தவறான முடிவினை கொடுத்து சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். கடந்த உலக கோப்பை தொடரில் கூட ஒரு ரன்களுக்கு பதிலாக இரண்டு ரன்கள் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர்.
அது குறித்து வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல நடுவர்கள் பல தவறான முடிவுகளை கொடுத்து வருகின்றனர் இவர்கள் செய்யும் தவறு அணியிழை பாதித்து விடக்கூடாது என்று தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இனி நோபால் வீசப்படும் போது அதனை மூன்றாவது நடுவர் கேமரா மூலம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விதி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.