வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்;வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 1

டெல்லியில் விவசாயிகளுக்கும் போலீசுக்கும் ஏற்ப்பட்ட சண்டையில் விவசாயிகள் ஆதரவான ஒரு கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசினார், இதற்கு மத்திய அரசு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லதல்ல மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்;வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 2

இந்நிலையில்தான் விவசாயிகள் போராட்டம் மீண்டும் ஒரு முறை சர்வதேச கவனத்தை ஈர்த்து விட்டது, விவசாயிகளின் போராட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ சூழலியல் ஆர்வலர்கள் போன்ற பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.ஆனால் அதற்க்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் வீரரகள் தனது கருத்துக்களை தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தியது.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது, வெளிப்புற சக்திகள் பார்வையாளராக மட்டுமே இருக்கலாம் ஆனா பங்கேற்பாளர்கள் ஆக கூடாது தெரிவித்திருக்கிறார், இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றி தெரியும் மேலும் இந்தியா ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்;வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 3

இது பற்றி இந்திய அணியின் நட்ச்சத்திர பேட்ஸ்மென் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் ஒற்றுமையாக செயல்பட்டு ஒருங்கிணைந்த தீர்வு காணும் போது நமது தேசம் மேலும் வலிமையாக மாரும், நம்ம நாட்டோட நன்மைக்கு விவசாயிகள் பங்களிப்பு முக்கிய வகிக்கிறது, எனவே அனைவரும் ஒன்றிணைந்து சுமுகமாக செயல்படுவோம் என்று தெரிவிததிருக்கிறார்.

ரஹானே தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் ஒன்றாக இருந்தால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இங்கு இல்லை, நாம் ஒன்றிணைந்து ,நமது உள்நாட்டு பிரட்சனைக்களை தீர்க்க பாடுபடுவோம் என தெரிவித்தார்

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்;வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! 4

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, நாம் ஒரே நாடாக இருந்து ஏற்ப்பட்டிருக்கும் பிரச்சனை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிற சக்திகள் திட்டத்தால் குழப்பமடைய வேண்டாம், நடுநிலையான உரையாடல் மூலம் அனைத்துக்கும் சுமூகமான தீர்வு இருக்கும் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *