மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிக எளிய இலக்கு !! 1

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிக எளிய இலக்கு

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மட்டும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிக எளிய இலக்கு !! 2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு மிகப்பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக ரோஹித் சர்மா வெறும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லியும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

மீண்டும் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; தென் ஆப்ரிக்கா அணிக்கு மிக எளிய இலக்கு !! 3

இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ரிஷப் பண்ட் 19, ஜடேஜா 19 மற்றும் ஹர்திக் பாண்டியா 14 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து ட்விட்டர் வாசிகளின் சில கருத்துகள் இங்கே;

https://twitter.com/khushikadri/status/1175776763009355777

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *