இலங்கையை இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளீர் படை... வாழ்த்தும் ரசிகர்கள் !! 1

பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கையை மிக இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. மொத்தம் 24 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய, இலங்கை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இலங்கையை இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளீர் படை... வாழ்த்தும் ரசிகர்கள் !! 2

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி வங்கதேசத்தின் ஸ்லைட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இலங்கை அணி கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும், அவர்களால் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணியின் ரணசிங்கே (13) மற்றும் ரணாவீரா (18*) ஆகிய இருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கையை இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளீர் படை... வாழ்த்தும் ரசிகர்கள் !! 3

இந்திய அணி சார்பில் ரெனுகா சிங் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் கெய்க்வாட் மற்றும் ஸ்னே ரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இலங்கையை இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளீர் படை... வாழ்த்தும் ரசிகர்கள் !! 4

இதன்பின் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 8.3 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய இந்திய பெண்கள் அணி 7வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

இலங்கையை இலகுவாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளீர் படை... வாழ்த்தும் ரசிகர்கள் !! 5

இந்தநிலையில், இலங்கை அணியை மிக இலகுவாக வீழ்த்தி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்திய இந்திய பெண்கள் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான வீராங்கனைகளையும் பிரபலங்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *