சுழன்றடித்த கிறிஸ் கெய்ல் சூறாவளி; ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் !
ஐ.பி.எல் டி.20 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கிறிஸ் கெய்லின் ருத்ரதாண்டவம் மூலம் 3 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கும், வரவேற்பிற்கும் மத்தியில் கோலகலமாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் விளையாடி வருகின்றன.
பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் (நடப்பு தொடரில் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது இதுவே முதன்முறை)
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு வழக்கம் போல் கே. எல் ராகுலும், கிறிஸ் கெய்லும் துவக்கம் கொடுத்தனர்.
இதில் கே.எல் ராகுல் 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார், பின்னர் வந்த மாயன்க் அகர்வால் 18 ரன்களிலும், கருண் நாயர் 31 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் மறுமுனையில் ஹைதராபாத்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாளாபுறமும் பறக்கவிட்டு மளமளவென ரன் குவித்த கிறிஸ் கெய்ல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 11 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் அணி 193 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து கிறிஸ் கெய்லின் இந்த ருத்ர தாண்டவத்தை சமூக வலைதளங்களில் பஞ்சாப் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதில் சில இங்கே;
Universe Boss making sure he won't be unsold in the first round of IPL 2019. #KXIPvSRH
— Trendulkar (@Trendulkar) April 19, 2018
Gayle storm it is, never seen Rashid Khan been clobbered like this. Chris Gayle is a man on a mission. Delight to watch this @lionsdenkxip #KXIPvSRH
— Mohammad Kaif (@MohammadKaif) April 19, 2018
RCB not retained KL Rahul…. he scored fastest fifty of the IPL.
RCB not retained Gayle… he scored a fifty and a centuw in just 2 matches.
RCB retained Sarfaraz and bought McCullum…. they are sitting on the bench.#SRHvKXIP
— Self Isolated Sunil (@1sInto2s) April 19, 2018
Only Person More Sad Than Rashid Khan Would Be Virat Kohli For Retaining Sarfaraz Khan Instead Of Universe Boss Chris Gayle. #KXIPvSRH #KXIPvsSRH #SRHvKXIP
— Sir Jadeja fan (@SirJadeja) April 19, 2018
Only Person More Sad Than Rashid Khan Would Be Virat Kohli For Retaining Sarfaraz Khan Instead Of Universe Boss Chris Gayle. #KXIPvSRH #KXIPvsSRH #SRHvKXIP
— Sir Jadeja fan (@SirJadeja) April 19, 2018
Why is @YUVSTRONG12 pa not come into bat?? #KXIPvSRH #VIVOIPL
— Pragyan Ojha (@pragyanojha) April 19, 2018
sometimes what you buy at the very end of a shopping stint proves to be the most useful item #KXIPvSRH
— Gaurav Kalra (@gauravkalra75) April 19, 2018
Gayle Balle
#KXIPvSRH pic.twitter.com/oKIkCeTWT3— GILL 2.0 (@ikpsgill1) April 19, 2018
Virat kohli Right now #KXIPvSRH #Gaylestorm pic.twitter.com/4fT2aiHlSI
— Manish (@Man_isssh) April 19, 2018