சென்னை வெற்றிக்குப்பின் விமான நிலைய தரையில் தோனி படுத்திருந்ததால் ட்விட்டரில் ரசிகர்கள் வெறித்தனம்

Cricket, Ms Dhoni, India, Australia, Twitter

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 281 ரன்கள் சேர்த்தது. இதற்கு அனுபவ வீரரான டோனியின் 79 ரன்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அத்துடன் ஸ்டம்பிங் செய்தும் அசத்தினார்.

சுமார் இரவு 10.30 மணிக்கு ஆட்டம் முடிவடைந்தது. 2-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 21-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக உடனடியாக இந்திய அணி கொல்கத்தா புறப்பட வேண்டியதிருந்தது.

வீரர்கள் அனைவரும் சென்னை விமான நிலையம் சென்றடைந்தனர். அங்கு விமானம் புறப்பட நேரம் இருந்ததால் வீரர்கள் தரையில் உட்கார்ந்திருந்தனர். அப்போது டோனி ஓய்வு எடுப்பதற்காக படுத்து தூங்கினார். இந்த படத்தை கிளிக் செய்து பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

 

இதனால், ட்விட்டரில் ரசிகர்கள் வெறித்தனம் ஆனார்கள்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.