திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ்; அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம் !! 1
திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ்; அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான ஏ.பி.டிவில்லியர்ஸ் இன்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான ஏ.பி.டிவில்லியர்ஸ் உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் படையை பெற்றுள்ளவர். இவரின் திறமைக்கும், அதிரடி ஆட்டத்திற்கும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளது நாம் அறிந்ததே.

ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் இழப்பாக டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்று தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்துள்ளார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நான் இன்று ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளேன், ஆம், எனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துவிட்டேன். சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் கைப்பற்றியதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன், அதே வேளையில் இது தான் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சரியான நேரம் என்று தோன்றுகிறது. அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.

திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ்; அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம் !! 2

இந்த தருணத்தில் என்னுடன் இத்தனை வருடங்கள் ஒன்றாக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும், தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அடுத்ததாக என்ன செய்ய போகிறேன் என்ற எந்த திட்டமும் என்னிடம் இல்லை, ஆனால் நிச்சயமாக தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டூபிளசிஸ் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு மிகப்பெரும் ஆதரவளானாகவும், உதவியாளனாகவும் இருப்பேன்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ்; அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம் !! 3

ஏ.பி டிவில்லியர்ஸின் இந்த திடீர் முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

https://twitter.com/iSRKsSoul/status/999253946874068993

https://twitter.com/Manushichillar1/status/999249129267068928

https://twitter.com/SrJadejaaa/status/999254613336326146

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *