உலகக்கோப்பை செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!! அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் இடமில்லை!! தமிழன் தினேஷ் கார்த்திக் குவியும் பாராட்டுக்கள்!! 1

உலகக் கோப்பைக்கு செல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஜடேஜாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு ரிஷப் பண்ட் இருவரும் இடம்பெறவில்லை. இதற்கு ட்விட்டரில் ரசிகர்களின் கருத்துக்களைக் காண்போம்.

மே மாதம் 30ம் தேதி துவங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக்கோப்பை செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!! அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் இடமில்லை!! தமிழன் தினேஷ் கார்த்திக் குவியும் பாராட்டுக்கள்!! 2

உலககோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளும் 15 பேர் கொண்ட அணிகளை ஏப்ரல் 20ம் தேதி கொடுக்கப்பட்ட கெடுவிற்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்து அணியும், இன்று காலை ஆஸ்திரேலிய அணியும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருந்தன.

அதே நேரம், இன்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இடம் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் அணியில் இடம்பெறவில்லை. பதிலாக கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளனர்.

தூக்கு வீரர்களாக வழக்கம்போல ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா உள்ளனர். கேப்டன் கோஹ்லி 3வது இடத்திலும், நடுத்தர பேட்டிங் வரிசையில் எம் எஸ் தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக்.

உலகக்கோப்பை செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!! அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் இடமில்லை!! தமிழன் தினேஷ் கார்த்திக் குவியும் பாராட்டுக்கள்!! 3

ஆல்ரவுண்டர் வரிசையில் ஹார்டிக் பாண்டியா,  விஜய் ஷங்கர், ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.

சுழற்பந்துவீச்சுக்கு குலதீப் யாதவ் மற்றும் சஹால் இடம்பெற்றுள்ளனர்.

வேகபந்துவீச்சு வரிசையில் புவனேஸ்வர் குமார், முஹம்மது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா உள்ளனர்.

இதற்க்கு ட்விட்டரில் ரசிகர்களின் கருத்துகளை காண்போம்.

https://twitter.com/i_m_manas028/status/1117738274615779328

https://twitter.com/kulasekarnsn/status/1117738094784987136

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *