இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அபார சதம் அடித்தார்.
தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணி 112 ரன் மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை எளிதாக எட்டிய இலங்கை அணி, முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மீண்டும் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், இந்திய அணியின் தொடக்கவீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் தந்தனர்.
68 ரன்னில் இருக்கும் போது ஷிகர் தவான் அவுட் ஆனார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அபார சதம் அடித்தார். தவான் பெவிலியன் சென்றதும் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.
ஐயர் விக்கெட் விழுந்தாலும், தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி கொண்டே இருந்த அவர், தனது மூன்றாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.