தற்போது இந்திய அணி இலங்கைக்கு சென்று 3 மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான, இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய அணி கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், இடது கை வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவை அணியில் சேர்க்கவில்லை. கடினமாக உழைத்து கொண்டிருக்கும் சுரேஷ் ரெய்னா, அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபியில் சுமாராக விளையாடிய யுவராஜ் சிங்குக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ட்விட்டர் கதிகலங்கி போயுள்ளது. இந்திய அணியில் அக்சர் பட்டேல், மனிஷ் பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணியை அறிவித்தவுடன் ட்விட்டரில் என்ன நடந்தது என பாருங்கள்: