சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 48 ரன்கள் அடித்து தனது அரைசதத்தை தவறவிட்ட இந்திய அணியின் அனுபவ வீரர் ரஹானேவை நெட்டிசன்கள் சிலர் ட்விட்டர் பதிவின் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. துவக்க ஜோடி மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர். இது தென்ஆப்பிரிக்க மைதானங்களில் சாதனை பார்ட்னர்ஷிப் ஆக மாறி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் மயங்க் அகர்வால் மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகிய மூவரின் உதவியோடு இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் அடித்து அசத்தியது.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் பத்து விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது தென்னாபிரிக்கா அதிகபட்சமாக டெம்பா 52 ரன்களை எடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடி வந்த அஜிங்கிய ரஹானே மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்பி 48 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். ரஹானேவின் ஆட்டம் கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இருந்த போதும் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவை இன்னும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் 48 ரன்கள் எடுத்து தனது அரைசதத்தை தவறவிட்ட ரஹானேவை கேலி செய்த சில ட்விட்டர் பதிவுகளை பார்ப்போம்.