இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டிகளில் சென்னையில் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி : விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லை, ஆனால் அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக தகவல் வந்திருந்தது. ஆனால், மீண்டும் ஒரு முறை சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்கவில்லை. இதனால், ரெய்னா மற்றும் யுவராஜ் ரசிகர்கள் ட்விட்டரில் பொங்கி எழுந்தார்கள்.